மகாராஷ்டிராவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆலியா பட், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலின் 4 கட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், நேற்று 5ஆம் கட்டத் தேர்தலில் மும்பை உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலும் மும்பையில்தான் வசிப்பதால், அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமிர்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார் என பல பிரபலங்களும் வந்து வாக்களித்தனர். ஆனாலும், ஆலியா பட், கத்ரீனா கைஃப், நோரா ஃபதேஹி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் வாக்களிக்க வரவில்லை. இந்நிலையில், அவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆலியா பட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் இங்கிலாந்து குடியுரிமையை வைத்திருக்கிறார். இதற்கு முன்பு கேல் கடோட் மற்றும் ஜேமி டோர்னன் இணைந்து நடித்த ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தபோது, ஆலியா பட் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தனது தாய் பர்மிங்காமில் பிறந்தவர் என்றும், தனது பாட்டியும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான், ஒருமுறை பேட்டி கொடுத்தபோது, இங்கிலாந்தில் பிறந்து, 3 மாத குழந்தையாக இருந்தபோது மும்பைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார். அங்கு தனது பெற்றோர் தொடங்கிய பள்ளியிலேயே தான் படிப்பை முடித்ததாகவும், தனது தாயார்தான் தனக்கு இங்கிலாந்து குடியுரிமை பெற்றுக் கொடுத்ததாகவும் ஆலியா பட்டின் தாயார் கூறியிருந்தார். அதன்படி, ஆலியா பட்டும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதால், அவர் இந்த தேர்தலில் வாக்களிக்க வரவில்லை.
பிரபல நடிகை கத்ரீனா கைஃப்பும் இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். கத்ரீனாவின் தந்தை முகமது கைஃப் காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் ஒரு பிரிட்டன் தொழிலதிபர். அதேபோல், அவரது தாயார் சுசான் டர்கோட் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் என்பதால், பிரிட்டன் குடியுரிமையை கத்ரீனா கைஃப் வைத்துள்ளார். இதனால் அவரும் வாக்களிக்க வரவில்லை.
Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?
நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி கனடா குடியுரிமை பெற்றவர். இது குறித்து ஏற்கெனவே பேசியுள்ள அவர், இந்தி திரையுலகில் அங்கீகாரம் பெறுவதற்காக கடினமாக முயற்சித்ததாகவும், தனக்கு அனைத்து வாய்ப்புகளும் கடைசி நிமிடத்தில், அதுவும் அதிர்ஷ்டவசமாகத்தான் கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார். தான் ஒரு கனடா நாட்டு குடிமகள் என்றும் அவர் ஏற்கெனவே கூறியுள்ளதால், இந்திய தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
2009ஆம் ஆண்டு இந்தியில் அலாடின் என்ற திரைப்படத்தில் அறிமுகமான, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையில் பிறந்து, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரும் வாக்களிக்கவில்லை.
.
&w=750&resize=750,375&ssl=1)
