Last Updated:
தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு முன் ரயிலில் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு முன் ரயிலில் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்திலுள்ள ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்த 25 வயதான கொரடா சிங்காசலமும், 19 வயதான பவானியும் இரண்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் ஹைதராபாத் ஜக்காரெட்டி கூடத்தில் இருக்கும் காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையே செகந்திராபாத் வந்த இருவரும்,அங்கிருந்து விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கடந்த 18 ம் தேதி மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
రైలు నుంచి పడి నవ దంపతులు మృతిచెందిన ఘటనలో ట్విస్ట్
మృతికి ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులుయాదాద్రి భువనగిరి జిల్లా వంగపల్లి – ఆలేరు రైలుమార్గంలో కింద పడి మృతి చెందిన దంపతులు
అయితే, ఈ ఘటనకు ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు
దీంతో భర్తతో గొడవ పడి క్షణికావేశంలో ముందుగా రన్నింగ్… https://t.co/2LvgY9SzG6 pic.twitter.com/fp3st5HCZp
— Telugu Scribe (@TeluguScribe) December 20, 2025
ரயில் பயணத்தின் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரயில் வங்கலப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.
ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவரகள் ரயிலில் பயணித்த போது சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவை பதிவு செய்தது யார் அந்த ரயில் பெட்டியில் பயணித்தவர்கள் யார் யார் என்று விசாரணை நடக்கிறது
Dec 21, 2025 10:26 PM IST
தெலங்கானாவில் ஓடும் ரயிலில் விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி… வாக்குவாதம் செய்த வீடியோ வைரல்!


