• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

SRH vs KKR | இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்? இரு அணிகளின் Playing XI இதுதான் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
SRH vs KKR | இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்? இரு அணிகளின் Playing XI இதுதான் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வலுவான கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் குவாலிபையர் 1 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் மொத்தம் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் ஆக்ரோஷமான பேட்டிங்கை அந்த அணி வெளிப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

14 இல் 8 போட்டிகளில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி மொத்தம் 17 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தை பிடித்தது. முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் குவாலிபையர் 1 போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த பில் சால்ட் இங்கிலாந்து திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக ஆப்கன் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஆன்ட்ரே ரஸல், ரின்கு சிங் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

விளம்பரம்

மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா, வருன் சக்ரவர்த்தி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதால் இவர்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா இணை எதிரணியை அச்சுறுத்தும் வகையில் விளையாடி வருகிறது. மிடில் ஆர்டரில் கிளாசன் பலம் சேர்க்கிறார்.

இருப்பினும் முதல் 4 விக்கெட்டுகளை ஐதராபாத்  பறி கொடுத்தால் சற்று தடுமாறலாம். பவுலிங்கில் நடராஜன், கம்மின்ஸ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். ஒப்பீட்டளவில் கொல்கத்தா வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. s

விளம்பரம்

இதையும் படிங்க – ஐபிஎல் தொடரில் சொந்த சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

அகமதாபாத் மைதானத்தில் சேஸிங் செய்யும் அணிகள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டாஸில் வெல்வது முக்கிய விளைவை ஏற்படுத்தலாம்.

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்-

கொல்கத்தா அணி- ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

விளம்பரம்

ஐதராபாத் அணி – அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்விர் சிங், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், விஜயகாந்த் வியாஸ்கந்த்.

.

Read More

Previous Post

’எனக்குப் பின் யார்..?’ -பிரதமர் மோடி யாரைச் சுட்டிக்காட்டுகிறார்?

Next Post

மின்சார வாகனங்களுக்கான சலுகைகள், சார்ஜிங் மையங்கள் குறித்த விவரங்கள் செயலி மூலம் அறிமுகம் செய்ய திட்டம் | Offers on electric vehicles, details on charging centres

Next Post
மின்சார வாகனங்களுக்கான சலுகைகள், சார்ஜிங் மையங்கள் குறித்த விவரங்கள் செயலி மூலம் அறிமுகம் செய்ய திட்டம் | Offers on electric vehicles, details on charging centres

மின்சார வாகனங்களுக்கான சலுகைகள், சார்ஜிங் மையங்கள் குறித்த விவரங்கள் செயலி மூலம் அறிமுகம் செய்ய திட்டம் | Offers on electric vehicles, details on charging centres

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin