Last Updated:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் இன்று மல்லுக்கட்டுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இன்று மாலை 6.30-க்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு போட்டி தொடங்கவிருந்த நிலையில், லக்னோவில் பனி கொட்டித் தீர்த்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகரில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த 3ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால் பனி காரணமாக போட்டி தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
December 17, 2025 8:46 PM IST


