சிங்கப்பூர்: சிங்கப்பூரில்
வரும் மே 21 ஆம் தேதி முதல் ஜூன் 23 வரை பள்ளிவிடுமுறைக் காலம் என்பதால் விடுமுறையை கொண்டாட அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு பயணிப்பதால் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே பயணிகள் அனைவரும் பொறுமையாக காத்து அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று ஜொகூர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தை ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் நடத்திருக்கலாம் என்று சந்தேக்கிக்கப்பட்டது.

