நேற்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை நேரத்திலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.98,960க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370க்கும் விற்பனை செய்யப்பட்டது.


