கொரோனா புதிய அலை மிக வேகமாக பரவி வருவதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இம்மாதத்தில் மாத்திரம் 25,000க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சரை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இதையடுத்து சகலரையும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே, மாதம் 05 முதல் 11 வரை மாத்திரம் சிங்கப்பூரில் 25,900 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“கொரோனா புதிய அலை பரவும் ஆரம்பத்தில் இருக்கிறோம். அடுத்து வரும் வாரங்களில் கொவிட் வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 250 க்கும் அதிகமானோர்கொ ரோனா வைரஸால் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன் ஏற்பாடுகளுக்காக அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரமாக மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்தவும் சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.
The post சிங்கப்பூரில் கொரோனா 250 பேர் நாளாந்தம் பாதிப்பு appeared first on Thinakaran.

