• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வீழ்ச்சியில் உருளைக்கிழங்கு விலை!! வாக்குவாதத்தில் முடிந்த கூட்டுறவு சங்க ஏலம்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
December 11, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வீழ்ச்சியில் உருளைக்கிழங்கு விலை!! வாக்குவாதத்தில் முடிந்த கூட்டுறவு சங்க ஏலம்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 11, 2025 4:22 PM IST

இதன் காரணமாக ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க சார் பதிவாளர் மற்றும் மேலாளர் நிசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

+

நீலகிரி

நீலகிரி கூட்டுறவு சங்கம் உருளைக்கிழங்கு ஏலம் 

உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு ஏலம் போனதால் மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் விவசாயிகள் எதிர்ப்பு. பாதியில் ஏலம் நிறுத்தம்.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக கடந்த 1935 ஆம் ஆண்டு நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கத்தில் 618 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஊட்டியில் செயல்படும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தை தலைமை இடமாகக் கொண்டு மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் கிளை நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இருந்து தமிழகம், கேரளா மற்றும் ஸ்ரீலங்கா, மாலத்தீவு, துபாய், பாகிஸ்தான் ஆகிய வெளிநாடுகளுக்கு நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திலிருந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நேற்று நீலகிரி மாவட்டத்தில் இருந்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு 22 லோடு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்திருந்தது. ஏலத்தில் 45 கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் 1300.00 லிருந்து ரூபாய் 1800.00 வரை விற்பனையானது. இந்த நிலையில் இன்று நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து 34 லோடு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்திருந்தது. ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கூறினார்கள். அப்போது 45 கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் 1000.00ல் இருந்து ரூபாய் 1300.00 வரை விற்பனையானது. நேற்றைய விலையை விட இன்று குறைந்த விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏலம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உருளைக்கிழங்கு வரத்து அதிகம் மற்றும் கிராக்கி இல்லாததால் ஏலத்தில் வியாபாரிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளாததால் உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கே ஏலம் போனது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்திய ஏலத்தை நாளை மீண்டும் நடத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. விவசாயிகள் தரப்பில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து ஏலத்தை நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் விவசாயிகள் அமைதியாக கலைந்து சென்றனர். ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் சுமார் 170 டன் கொண்ட 34 லோடு உருளைக்கிழங்கு தேக்கமடைந்தது. இதனால் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒருவித பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 11, 2025 4:22 PM IST

Read More

Previous Post

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரிடையே ஆண் குழந்தை பிறப்பு அதிகரிப்பு – பெண் கருக்கலைப்பு சந்தேகம்!

Next Post

ஜாலான் ராசா துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது சந்தேக நபர் கைது | Makkal Osai

Next Post
ஜாலான் ராசா துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது சந்தேக நபர் கைது | Makkal Osai

ஜாலான் ராசா துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது சந்தேக நபர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin