Last Updated:
பிரவீன் சக்கரவர்த்தி, பெண்கள் உரிமைத் தொகை மாநில நிதி நெருக்கடியை அதிகரிக்கும் தவறான நடைமுறை என்றும், ஆண்டுக்கு 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் விமர்சித்துள்ளார்.
பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை, மாநிலங்களின் நிதி நெருக்கடியை அதிகரிக்கும் ஒரு தவறான நடைமுறை என்று காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.
செய்தி நிறுவனத்துக்கு எழுதி உள்ள கட்டுரையில், பிகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மூலமாக வாக்காளர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டு பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுவதில் பெருமை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவதாகவும், இந்த மாய தோற்றத்தை நம்பி பெண்களுக்கு நிதி வழங்குவது தேர்தல் வெற்றி வாய்ப்பிற்கு துணைபுரியும் என்று பிற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் எண்ணுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பெண்களுக்கு பணம் வழங்கும் உத்தியை 2023 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கர்நாடகாவில் காங்கிரஸ் தொடங்கியதாகவும், அதை தற்போது ஒவ்வொரு மாநிலமும் பின்பற்றி வருவதாகவும் சொந்த கட்சியையே பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.
இந்த நடைமுறை முழு நாட்டையும் நிதிப் பேரழிவு பாதையில் தள்ளக்கூடும் என்றும் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
December 10, 2025 3:54 PM IST


