Last Updated:
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு பகிருமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்களை திருப்பி அளிப்பதற்கு நாளை கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து, 15 துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். இதில் காவல் துறை, சி.ஆர்.பி.எஃப், ரயில்வே, வருமான வரித்துறை, வணிக வரித்துறை, சிவில் விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனிடையே, தமிழ்நாட்டில் 99.99 சதவீத வாக்காளர்களுக்கு, அதாவது ஆறு கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 99.95 சதவீத வாக்காளர்களின் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர் படிவங்களை திருப்பி அளிப்பதற்கு காலக்கெடு நாளையுடன் நிறைவடையும் சூழலில், வரும் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது.
இதனிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு பகிருமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
December 10, 2025 8:35 PM IST
S.I.R. படிவங்களை திருப்பி அளிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு : தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு


