• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கொரோனா தடுப்பூசி பெயரில் செய்யப்படும் புதிய வகை மோசடி… மக்களுக்கு எச்சரிக்கை !

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கொரோனா தடுப்பூசி பெயரில் செய்யப்படும் புதிய வகை மோசடி… மக்களுக்கு எச்சரிக்கை !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஃபிஷிங் முதல் அடையாள திருட்டு வரை, மோசடியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி மேசடி செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு சைபர் குற்றங்கள் நிகழ்வதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது.

இதனிடையே கோவிஷீல்ட் போட்டு கொள்வதால் ஏற்படும் அரிய பக்கவிளைவு குறித்து AstraZeneca நிறுவனம் பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ள நிலையில், நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம் நடந்து வருகிறது. இந்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவு விஷயம் சைபர் ஹேக்கர்களுக்கு மோசடி செய்ய ஒரு புதிய வழியை வழங்கியுள்ளது. இந்த சூழலில் தற்போது ஒரு புதிய வகை சைபர் மோசடி தலைப்பு செய்தியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள சைபர் செல்களில் இது சார்ந்து பல புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இங்கே பார்ப்போம்.

விளம்பரம்

கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி குறித்த ஃபீட்பேக் காலிங் (Feedback Calling) என்ற பெயரில் சைபர் கிரிமினல்கள் மோசடியில் ஈடுபட்டு மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்து வருகின்றனர். ஆன்லைனில் பணம் செலுத்துவது முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது வரை, ஒரு நிறுவனம் வழங்கும் வசதியை ஆன்லைனில் பயன்படுத்திய பிறகு, குறிப்பிட்ட நிறுவனம் அல்லது வங்கிகள் அடிக்கடி யூஸருக்கு கால் செய்து Feedback-ஸை பெறுகின்றன.

குட்டி நயன்தாராவின் சூப்பரான பதில்… விமர்சனங்களுக்கு நெத்தியடி கொடுத்த அனிகா.!


குட்டி நயன்தாராவின் சூப்பரான பதில்… விமர்சனங்களுக்கு நெத்தியடி கொடுத்த அனிகா.!

அதே போல சைபர் செக்யூரிட்டி காரணமாக இப்போதெல்லாம் பல வங்கிகள் எந்தவொரு பேமென்ட்டையும் இறுதி செய்வதற்கு முன்பு வாடிக்கையாளரின் ரிஜிஸ்டர்ட் மொபைல் நம்பருக்கு கால் செய்வதன் மூலம் வாடிக்கையாளரிடமிருந்து Feedback பெறுவதை கட்டாயமாக்கியுள்ளன. அதனால் வேறு யாரும் வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தை ஏமாற்ற முடியாது. ஆனால் சைபர் கிரைமினல்களோ இப்போது இந்த Feedback Calls என்ற விஷயத்தை தங்களது ஏமாற்று வேலைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் அப்பாவி மக்களை எப்படி தங்களது வலையில் சிக்க வைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

விளம்பரம்

இதையும் படிக்க: 
ஆதார் கார்டுல இத ஒருமுறை மட்டும் தான் மாற்ற முடியுமாம்… என்னனு தெரிஞ்சுக்கோங்க !

முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான கருத்து அழைப்பு (feedback call) தடுப்பூசி முகாமின் அனுபவம் மற்றும் டோஸ் குறித்த தகவல்களை மக்களிடம் கேட்டறிந்தது. நீங்களும் கூட அப்போது இது சார்ந்த ஃபீட்பேக் கால்ஸ்களுக்கு பதில் அளித்திருக்க கூடும். தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் பரவலாக பேச்சு எழுந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி ஃபீட்பேக் கால் என்ற பெயரில் மீண்டும் மக்களுக்கு சைபர் மோசடியாளர்கள் கால் செய்து ஏமாற்றி வருகின்றனர்.

விளம்பரம்

டெல்லி காவல்துறையுடன் தொடர்புடைய சைபர் நிபுணர் கிஸ்லே சவுத்ரி பேசுகையில், மோசடியாளர்கள் மக்களுக்கு கால் செய்து நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளீர்களா! இல்லையா! என்று கேட்பதாக கூறப்படுகிறது. ஆம் எனில் ஒன்றை அழுத்தவும், இல்லையெனில் இரண்டை அழுத்தவும் என்றும் போனில் பேசும் குரல் சொல்கிறது. இந்த அழைப்பு மோசடியாளர்கள் விரித்த வலை என்பது தெரியாமல் மக்கள் உடனடியாக கருத்துக்கான பட்டனை அழுத்தி மோசடி வலையில் சிக்குகிறார்கள் என்றார்.

ஒரே ஒரு படம்… பாலிவுட்டின் பிரபல நடிகைகளை அலறவிட்ட 16 வயது நடிகை.. யார் இவர்.?


ஒரே ஒரு படம்… பாலிவுட்டின் பிரபல நடிகைகளை அலறவிட்ட 16 வயது நடிகை.. யார் இவர்.?

மோசடி நபர்கள் கேட்டது போல 1-ஆம் அல்லது 2-ஆம் எண் பட்டன்களை அழுத்தியவுடன் குறிப்பிட்ட ஃபோன் ஹேங்க் ஆகி விடும் என்கிறார் கிஸ்லே. இதனை தொடர்ந்து சைபர் ஹேக்கர்கள் குறிப்பிட்ட மொபைலில் இருக்கும் வங்கி கணக்கின் பெயர் மற்றும் அக்கவுண்ட் நம்பரை அணுக கூடும். கோவிட் தடுப்பூசி என்ற பெயரில் பல மோசடிகள் தொடர்ந்து பதிவாகி வருவதால் தேவையற்ற அழைப்புகள் வந்தால் அதனை தவிர்க்க போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

Tamilmirror Online || ’ஈரான் ஜனாதிபதியின் மறைவு அதிர்ச்சிக்குரியது’

Next Post

பின்வாங்கிய ஆஸி. நிர்வாகம்.. சிட்னிக்கு “மொத்தமாக” பறந்த இந்திய அணி.. மாஸ்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
பின்வாங்கிய ஆஸி. நிர்வாகம்.. சிட்னிக்கு “மொத்தமாக” பறந்த இந்திய அணி.. மாஸ்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

பின்வாங்கிய ஆஸி. நிர்வாகம்.. சிட்னிக்கு "மொத்தமாக" பறந்த இந்திய அணி.. மாஸ்! - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin