ஈரோடு:
ஈரோடு அன்னை சத்யா நகரத்தைச் சேர்ந்த மாணிக் – மகாலட்சுமி தம்பதியினரின் மகன் சாய் சரண் (5), கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) இரவு பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வீட்டிலிருந்த வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, திடீரென இருமல் ஏற்பட்டு, பழத்துண்டு மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், வாழைப்பழத் துண்டு உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் சென்றதால், நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது.
சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த வாழைப்பழத் துண்டை மருத்துவர்கள் வெளியே எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.




