வாக்குச்சாவடிகளில் எவ்வளவு தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள் என பொதுமக்களுக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார்.
கூடுதலாக 12 மணிநேரமானாலும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பிறகு திரும்ப வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மும்பையில் பேசிய அவர், ”மும்பை மத்திய தொகுதியின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு தாமதமாகிறது. வாக்குப்பதிவு தாமதாமாகும் பகுதிகளில் சிவசேனைக்கு (உத்தவ் பிரிவு) அதிக வாக்குகள் கிடைப்பதற்காக வாய்ப்புள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் கீழ்த்தரமான விளையாட்டு இது. வாக்காளர்களுக்கு மத்தியில் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் பாகுபாடு மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.
தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளால் குறிப்பிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு தாமதமாகிறது. வாக்காளர்களிடம் பலமுறை வாக்குச்சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)