• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு வேளை உணவிற்காக கையேந்தியவர்..! இன்று ரூ.40 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர் !

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒரு வேளை உணவிற்காக கையேந்தியவர்..! இன்று ரூ.40 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குடிசையிலிருந்து கோபுரத்திற்கு சென்ற கதையை திரைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்று நினைத்தால் நம்மைவிட பெரிய முட்டாள்கள் யாரும் இல்லை. தங்களுடைய கடுமையான உழைப்பாலும் புத்திசாலிதனத்தாலும் ஏழ்மை நிலையிலிருந்து பெரும் பணக்காரர்களாக மாறிய பலரின் வாழ்க்கை கதை நம்முன்னே நிறைய இருக்கிறது.

அப்படி ஒருவர் தான் ரேனுகா ஆராதயா. பல சோதனைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் எதிர்த்து போராடி தன்னுடைய கடுமையான உழைப்பால் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரேனுகா. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த கோவில் பூசாரி குடும்பத்தில் பிறந்த ரேனுகா, தனது சிறுவயது முழுவதும் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார்.

விளம்பரம்

இவ்வுளவு மோசமான சூழ்நிலைகளுக்கு நடுவிலும் பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். குடும்ப வறுமை காரணமாக மேல்படிப்பிற்கு செல்லாமல் அருகிலுள்ள கிராமக் கோவிலில் பூசாரியாக பணியில் சேர்ந்தார். தினமும் கோவிலில் பூஜை முடிந்ததும், ரேனுகாவும் அவரது தந்தையும் கையில் பாத்திரத்தை ஏந்தியபடி ஒவ்வொரு வீடாக அரிசி, தானியம், மாவு போன்றவற்றை தானமாக பெறுவார்கள்.

கொஞ்சம் பெரியவன் ஆனதும் அருகிலுள்ள வீடுகளில் சமையல் வேலையாளாகவும் வீட்டு வேலை செய்யும் பணிகளையும் செய்தார் ரேனுகா. 20 வயதில் திருமணம் செய்து கொண்டாலும் காவலாளியாகவும் கூலி வேலைக்கும் சென்று வந்து கொண்டிருந்தார். அதன்பிறகு சிறிது காலம் பிளாஸ்டிக் ஆலையில் வேலை செய்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஒருவர் எத்தனை பேங்க் அக்கவுண்ட் வச்சிக்கலாம்..? அதிக வங்கி கணக்கு வைத்திருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அங்கு பணிபுரிந்த போதுதான் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை அவர் மனதிற்குள் தோன்றியது. சிறிது நாட்களிலேயே சூட்கேஸ் கவர் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார். ஆனால் இதில் அவருக்கு ரூ.30,000-க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மறுபடியும் காவலாளியாக வேலை பார்க்க தொடங்கினார். அதன்பின்னர் டிராவல் ஏஜென்ஸி ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அங்கு நான்கு வருடங்களுக்கும் மேலாக ஓட்டுனராக பணிபுரிந்தார்.

விளம்பரம்

இதில் கிடைத்த அணுபவத்தைக் கொண்டு, தான் அதுவரை சேமித்து வைதித்ருந்த பணத்தையும் வங்கியிலிருந்து பெற்ற கடனையும் சேர்த்து சொந்தமாக கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காரை வைத்து pravasi cabs என்ற பெயரில் டிராவல் ஏஜென்ஸியை தொடங்கினார் ரேனுகா. அடுத்தடுத்த வருடங்களில் தொழில் வளர்ச்சியடையவும், ரூ.6 லட்சம் செலவு செய்து இன்னொரு கால் டாக்ஸி நிறுவனத்தை சொந்தமாக வாங்கினார்.

குட்டி நயன்தாராவின் சூப்பரான பதில்… விமர்சனங்களுக்கு நெத்தியடி கொடுத்த அனிகா.!


குட்டி நயன்தாராவின் சூப்பரான பதில்… விமர்சனங்களுக்கு நெத்தியடி கொடுத்த அனிகா.!

இந்நிலையில் அமேஸான் நிறுவனம் தங்களுடைய பொருட்களை விளம்பரபடுத்த இவரை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து வால்மார்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்கள் ரேனுகாவோடு கூட்டு சேர்ந்து பணியாற்ற தொடங்கின. நாளடைவில் இவருடைய நிறுவனத்தின் வருவாய் ரூ.40 கோடியை தாண்டிச் சென்றது. தற்போது இவருடைய நிறுவனத்தில் 150 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகின்றனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

மும்பை அணிக்கு ‘பை பை’ உறுதியா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ரோகித் சர்மா கோபத்தின் பின்னணி | Sure to leave Mumbai… – Why is Rohit Sharma angry with Star Sports?

Next Post

ரெய்சி மறைவு: ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் முதல் தற்காலிக அதிபர் நியமனம் வரை | Iran Leader Ayatollah Khamenei declares five days of national mourning over loss of Raisi, FM

Next Post
ரெய்சி மறைவு: ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் முதல் தற்காலிக அதிபர் நியமனம் வரை | Iran Leader Ayatollah Khamenei declares five days of national mourning over loss of Raisi, FM

ரெய்சி மறைவு: ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் முதல் தற்காலிக அதிபர் நியமனம் வரை | Iran Leader Ayatollah Khamenei declares five days of national mourning over loss of Raisi, FM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin