வியாபாரிகளின் மதிப்பீடுகளின்படி, நவம்பரில் பாமாயில் இறக்குமதி மாதத்திற்கு மாதம் 4.6% அதிகரித்து 6,30,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. விலைகள் குறைந்ததே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. மறுபுறம், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 12% குறைந்து 4,00,000 டன்னாக இருந்தது. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 44% குறைந்து 1,45,000 டன்னாக இருந்தது.


