மேலும் அவர் கூறும்போது, தற்போதைய உலகளாவிய சந்தை சூழல் நிச்சயமற்ற தன்மையால் நிரம்பி உள்ளதால், வெள்ளி அடிப்படையிலான முதலீட்டு தயாரிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், வெள்ளிக்கான நீண்டகால தொழில்துறை தேவையும் வலுவாக உள்ளது. சோலார் பேனல்கள், பேட்டரிகள், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளும் அதிகளவு வெள்ளியைப் பயன்படுத்துகின்றன. இதுவும் வெள்ளி விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.


