Last Updated:
ஒருநாள் போட்டியை தொடரை கைப்பற்றி இந்திய அணி கம் பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது
ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ முக்கிய அறிவுறுத்தலை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது தற்போதைக்கு அவர் ஓய்வு தொடர்பான எந்த ஒரு கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக திகழும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் ஃபார்மேட்டுகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். தற்போது அவர்கள் முழுமையாக ஒரு நாள் போட்டி தொடரில் மட்டுமே விளையாடுகிறார்கள். இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அவர்களது பேட்டிங் ஃபார்ம் அவ்வப்போது கேள்வியை எழுப்பி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி நாளை நவம்பர் 30ஆம் தேதியும், இரண்டாவது போட்டி டிசம்பர் 3-ஆம் தேதியும், கடைசி போட்டி டிசம்பர் 6ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ ரோஹித் சர்மாவுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது ரோகித் சர்மா தன்னுடைய பிட்னஸ் உடல் நலன் மற்றும் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஓய்வு குறித்து எந்த தருணத்திலும் கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் பிசிசிஐ ரோஹித் சர்மாவை அறிவுறுத்தியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் நாளை தொடங்க உள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருக்கும் நிலையில் ஒருநாள் போட்டியை தொடரை கைப்பற்றி இந்திய அணி கம் பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
November 29, 2025 7:43 PM IST


