• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீரற்ற காலநிலை – யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

GenevaTimes by GenevaTimes
November 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீரற்ற காலநிலை – யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த
4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.


24ம் திகதி முதல் இன்று மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது.

வீடு முழுமையாக சேதம்


பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும்
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 795 பேரும்,
சங்கானை பிரதேச செயலக பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 725 பேரும்,
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேரும்
வேலணை பிரதேச செயலக பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேரும்
பாதிக்கப்பட்டனர்.

சீரற்ற காலநிலை - யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு | Police Emergency Telephone Number Srilanka



சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேரும்,
தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேரும்,
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேரும்
காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும் உடுவில்
பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் யாழ்ப்பாணம்
பிரதேச செயலக பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் பாதிக்கப்பட்டனர்.


கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும், நல்லூர்
பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், ஊர்காவற்துறை
பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், கரவெட்டி பிரதேச
செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டனர்
அறிக்கையிடப்பட்டுள்ளது.


மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன்
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது.

ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

செய்திகள் – பிரதீபன்

முதலாம் இணைப்பு 

உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகப் காவல்துறையினர் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.



தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமை காரணமாக, உயிர் காப்புப் பணிகளுக்கும் மற்றும் எந்தவொரு அனர்த்த நிலைமையிலும் ஈடுபடுத்தப்படுவதற்காகப் படகுகளுடன் கூடிய காவல்துறை கடற்படைப் பிரிவின் அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இதன்படி, இந்தக் கடற்படைப் பிரிவின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பின்வரும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.



பணிப்பாளர் / காவல்துறை கடற்படைப் பிரிவு – சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கபில பிரேமதாச : 071-8591868  

அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் அவசர அனர்த்த மேலாண்மை மையம் (DMC): 117 (அவசர அனர்த்த தகவல் வழங்கல் மற்றும் நிவாரண சேவைகளின் ஒருங்கிணைப்பு)

காவல்துறையினர் அவசர அழைப்பு: 119 (உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்) சுவ வசரிய

ஆம்புலன்ஸ் சேவை: 1990 (நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக)

தீயணைப்பு படை: 110 (தீ விபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க)

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946 (நிலச்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கைக்காக)

வானிலை ஆய்வு துறை: 011 268 6686 (வானிலை முன்னறிவிப்புகளை அறிய)

கடற்படை தலைமையகம்: 011 244 5368 (வெள்ள அனர்த்த நேரங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)

இராணுவ தலைமையகம்: 113 (அவசர அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)

விமானப்படை தலைமையகம்: 116 (ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்காக)

Read More

Previous Post

பெரும்பாலான சிங்கப்பூரர்கள் மரண தண்டனையை ஆதரிக்கிறார்கள் என்கிறார் சிங்கப்ப்பூர் வெளியுறவு அமைச்சர் | Makkal Osai

Next Post

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Next Post
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin