Last Updated:
ஜோகன்னஸ்பர்க் நகரில் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய வரவேற்பும், இந்திய வம்சாவளியினர் வாழ்த்தும் வழங்கப்பட்டது.
தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு பராம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகருக்கு சென்ற பிரதமருக்கு சிவப்பு கம்பளத்துடன், பாரம்பரிய வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹோட்டலுக்குச் சென்ற பிரதமருக்கு இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தென் ஆப்ரிக்கா பயணம் குறித்து பதிவிட்டுள்ள பிரதமர், ஜி20 உச்சி மாநாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
November 21, 2025 8:45 PM IST


