• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரியை UPI ஆப்ஸ்கள் மூலம் ஈஸியாக செலுத்தலாம்…! படிப்படியான வழிமுறைகள் இதோ… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 21, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
வருமான வரியை UPI ஆப்ஸ்கள் மூலம் ஈஸியாக செலுத்தலாம்…! படிப்படியான வழிமுறைகள் இதோ… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாகின் செய்து e-Pay Tax-ஐ ஓபன் செய்யவும்:

incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று யூஸர் ஐடியாக உங்கள் PAN மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாகின் செய்யவும். பின் தெரியும் டேஷ்போர்டில், e-Pay Tax என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். நீங்கள் லாகின் செய்யவில்லை என்றால், ஹோம்பேஜில் e-Pay Tax (without login) ஆப்ஷனையும் பயன்படுத்தலாம். ஆனால், லாகின் செய்வது ரெசிப்ட்டை பின்னர் ட்ராக் செய்வதை எளிதாக்குகிறது.

உங்கள் சலானை சரியாக உருவாக்கவும்:

புதிய பேமென்ட்டை தேர்ந்தெடுத்து சரியான டேக்ஸ் வகையை தேர்ந்தெடுக்கவும். பெரும்பாலான தனிநபர்கள் முன்பண வரி (Advance tax) அல்லது சுய மதிப்பீட்டு வரியை (Self-assessment tax) தேர்ந்தெடுப்பார்கள். பின் சரியான மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை என்டர் செய்யவும்.

தொடர்வதற்கு முன் உங்கள் பெயரையும், PAN நம்பரையும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், அதிகாரப்பூர்வ போர்ட்டல் ஒரு சலானை உருவாக்கி, செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் அதை செலுத்த உள்ள பேமென்ட் மோட்ஸ்களைக் காட்டுகிறது.

உங்களுக்கு விருப்பமான UPI ஆப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள்:

பேமென்ட் மோட்ஸ்களில் UPI ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். போர்ட்டல் ஒரு QR குறியீட்டைக் (பெரும்பாலும் UPI ஐடி) காண்பிக்கும். உங்கள் மொபைலில் Paytm, PhonePe அல்லது Google Pay என எந்த ஆப் உங்களுக்கு மிகவும் விருப்பமானதோ அதை ஓபன் செய்து Scan & Pay ஆப்ஷனை பயன்படுத்தவும். இதன் மூலம் QR-ஐ ஸ்கேன் செய்யவும், சரியான தொகையை உறுதிப்படுத்தவும், உங்கள் UPI PIN மூலம் பணம் செலுத்துவதை அங்கீகரிக்கவும். “payment successful” என்று வரும்வரை குறிப்பிட்ட ஆப்ஸை விட்டு வெளியே வராமல் காத்திருக்கவும்.

கிரெடிட்டை உறுதிசெய்து ரசீதை டவுன்லோட் செய்யவும்:

e-filing டேப்-ற்கு திரும்பவும். வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் “பணம் செலுத்தப்பட்டது” என்று மாறும். பின் பேமென்ட் ஹிஸ்ட்ரி சென்று உங்கள் சலான் ரசீதை டவுன்லோட் செய்யவும். இது CIN (சலான் அடையாள எண்) மற்றும் UTR-ஐ கொண்டிருக்கும், இவை நீங்கள் பணம் செலுத்தியதற்கான சான்று. இந்த PDF-ஐ டவுன்லோட் செய்து சேமித்து உங்கள் இ-மெயிலுக்கு நீங்களே ஒரு நகல் அனுப்பி கொள்ளுங்கள்.

பேமென்ட் தோல்வியடைந்தாலோ அல்லது நிலுவையில் இருந்தாலோ…!

சில நேரங்களில் UPI வெற்றியடைந்ததாகக் காட்டினாலும், போர்ட்டலில் பேமென்ட் இன்னும் “நிலுவையில் உள்ளது” என்று தெரியக்கூடும். இந்த சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக மீண்டும் பணம் செலுத்த வேண்டாம். 30-60 நிமிடங்கள் காத்திருந்து பேமென்ட் ஹிஸ்ட்ரியை புதுப்பிக்கவும்.

அப்போதும் உங்கள் பேமென்ட் நிலுவையில் இருந்தால், உங்கள் வங்கி அறிக்கையில் டெபிட் உள்ளதா என சரிபார்க்கவும். பணம் டெபிட் செய்யப்பட்டு சலான் உருவாக்கப்படவில்லை என்றால், போர்ட்டலில் ஒரு புகார் டிக்கெட் பதிவு செய்யுங்கள் அல்லது UTR மூலம் உங்கள் வங்கி/UPI ஆப் சப்போர்ட்டை தொடர்பு கொள்ளவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தோல்வியுற்ற UPI டேக்ஸ் பேமென்ட்கள் குறுகிய காலத்தில் தானாகவே செலுத்தியவர் வங்கி கணக்கிற்கு மீண்டும் திரும்பும்.

தவறுகளைத் தவிர்க்க உதவும் டிப்ஸ்கள்:

நீங்கள் பணம் செலுத்துவதற்கு முன்பு மதிப்பீட்டு ஆண்டு மற்றும் வரி வகையை சரியாக தேர்வு செய்யவும். உங்கள் UPI இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் போதுமான பேலன்ஸ் உள்ளதையும் மற்றும் KYC-இணக்கமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பேமென்ட் செய்த பின்னர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்ற மெசேஜ் வரும்வரை மற்றும் ரசீது கிடைக்கும் பிரவுஸர் டேப்-ஐ ஓபனில் வைத்திருங்கள். சலானுடைய PDF, UPI பரிவர்த்தனை ஐடி மற்றும் வங்கி SMS ஆகியவற்றை ஒன்றாக சேமித்து வைக்கவும். ரிட்டர்ன் தாக்கல் செய்யும் நேரத்திலோ அல்லது வருமானவரி துறை ஆதாரம் கேட்டாலோ அவை உங்களுக்குத் தேவைப்படும்.

சுருக்கமாக…

Paytm, PhonePe அல்லது Google Pay மூலம் வருமான வரி செலுத்துவது எளிது. போர்ட்டலில் சலான் உருவாக்கி, UPIஐத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆப் மூலம் பணம் செலுத்துங்கள், பின்னர் ரசீதை டவுன்லோட் செய்யவும். அடிப்படை விஷயங்களை சரியாகச் செய்யுங்கள், பேமென்ட் செலுத்தியதற்கான ஆதாரங்களை எப்போதும் அணுகுமாறு வைத்திருங்கள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 21, 2025 12:54 PM IST

Read More

Previous Post

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை

Next Post

ஏமாந்து வரும் மஇகா அம்னோவுக்கோ பாரிசானுக்கோ எதிரிகள் அல்ல – விக்னேஸ்வரன் – Malaysiakini

Next Post
ஏமாந்து வரும் மஇகா அம்னோவுக்கோ பாரிசானுக்கோ எதிரிகள் அல்ல – விக்னேஸ்வரன் – Malaysiakini

ஏமாந்து வரும் மஇகா அம்னோவுக்கோ பாரிசானுக்கோ எதிரிகள் அல்ல – விக்னேஸ்வரன் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin