• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுவதாகவும் வழக்கமாகச் சில வீதிகளைத் திறந்து வைத்துவிட்டு, அவற்றை நிலம்
விடுவிப்பு என விளம்பரப்படுத்துகின்றது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) குற்றஞ்சாட்டியுள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு
தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாதீட்டில் பாதுகாப்புத்துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு
காணப்படுகின்றது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகள்
காணி உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் ஆன பின்பும் பாதுகாப்புத்துறைக்கான நிதி
ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கின்றது. ஆனால், அதே நேரத்தில், கல்வி, சுகாதாரம்
மற்றும் மக்கள் நலன் போன்ற முக்கிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

முழு நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள், போரினால் பாதிக்கப்பட்ட
குடும்பங்கள், நாட்டில் உள்ள முதியோர் ஆகியோரின் தேவைகளை அரசு கவனத்தில்
எடுக்கவில்லை.

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு | Govt Has Not Released Lands Of North East People

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாடசாலைகளில் இன்றளவிலும்
பிள்ளைகள் தற்காலிக கூடங்களில் கல்வி கற்கின்றனர்.

பிரதமர் ஹரிணி எதிர்க்கட்சியில் இருந்த காலத்திலும் கல்விக்குக் குறைந்தது 6
வீத நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் தற்போது இன்று
அவரே ஆட்சியில் இருந்தாலும் கல்வித்துறைக்கான நிதி பாதுகாப்புத்துறையை
ஒப்பிடும் வகையில் இல்லை. இது ஆட்சியின் முன்னுரிமைகளில் ஒரு முரண்பாடாகும்.

வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுகின்றது.

வடக்கு மாகாணத்தில் நிலம் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறுவது தவறானது. அரசு
வழக்கமாக சில வீதிகளைத் திறந்து வைத்துவிட்டு, அவற்றை “நிலம் விடுவிப்பு” என
விளம்பரப்படுத்துகின்றது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் 

ஆனால், வீதியின் இருபுற நிலங்களும் இன்னும்
பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வட பகுதியில் உள்ள வயவிளான் பாடசாலை மாணவர்கள் இன்று வரை ஒரு விளையாட்டு
மைதானத்தில் உள்ள தற்காலிக கூடாரத்தில் கல்வி கற்க வேண்டிய நிலை
காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு சலூன்தான் உள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால் ஒன்றை விட பல சலூன்களை இராணுவத்தினர் நடத்துகிறார்கள். இது தான் உண்மை.

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு | Govt Has Not Released Lands Of North East People


திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு திருகோணமலையில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்ட
விவகாரம் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன் மக்களால் மற்றும் நாடாளுமன்றத்தில்
எழுப்பப்பட்ட அதே கேள்வி இன்னும் தீர்க்கப்படவில்லை.



வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் நில உரிமைகள் தொடர்ந்து எதிர்மறை
நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றன. எமது நிலத்தைப் பாதுகாக்க முடியாத நிலை
இன்றளவிலும் தொடர்கின்றது.


பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டைத் திருதியமைத்து, கல்வி, சுகாதாரம்,
வீடமைப்பு போன்ற மக்கள் நலத்துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சமூக ஊடக புகழ் பெற்றவரின்  வீட்டில் நடந்த திருட்டு: தம்பதி கைது | Makkal Osai

Next Post

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு | Case filed against husband who gambled wife as collateral

Next Post
மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு | Case filed against husband who gambled wife as collateral

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு | Case filed against husband who gambled wife as collateral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin