Last Updated:
பிகார் தேர்தல் வெற்றிக்கு வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பாக நிதிஷ்குமார் அரசு பெண்களுக்கு 10,000 ரூபாய் வழங்கியதுதான் காரணம் என சில கட்சிகள் குற்றம் சாட்டின.
உலக வங்கியின் நிதி, பிகாரில் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் வெற்றிக்கு வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பாக நிதிஷ்குமார் அரசு பெண்களுக்கு 10,000 ரூபாய் வழங்கியதுதான் காரணம் என சில கட்சிகள் குற்றம் சாட்டின.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜன்சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவான் வெர்மா, உலக வங்கியின் நிதி 14,000 கோடி ரூபாய் பிகாரின் 1 கோடியே 25 லட்சம் பெண்களுக்கு 10,000 ரூபாயாக அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக அரசுத் திட்டங்களுக்காக உலக வங்கியிடமிருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய் வந்ததாகவும், அது தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால், இதனை மறுத்துள்ள சிராக் பாஸ்வான் இந்த தகவல்களை, அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.
#WATCH | On Jan Suraaj spokesperson Pavan Verma’s allegations of deviation of World Bank funds to give Rs 10,000 to women in Bihar, Union Minister Chirag Paswan says, “Where do they get this data from, this information from?…Making empty claims – if you have any facts, present… https://t.co/GVi8XhLnHe pic.twitter.com/kTLpyMdcP9
— ANI (@ANI) November 16, 2025
வெற்று விவாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, ஆதாரங்களைக் காட்டினால் அரசு அதற்கு விளக்கமளிக்கும் என்றும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
November 16, 2025 7:30 PM IST
பிகாரில் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க உலக வங்கியின் நிதி பயன்படுத்தப்பட்டதா? – குற்றச்சாட்டும் மறுப்பும்!


