Last Updated:
பீகார் ரகோபூரில் தேஜஸ்வி யாதவ் காலை முதல் முன்னிலை, பின்னடைவு என மாறி மாறி ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இறுதியாக வென்றுள்ளார்.
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் என்.டி.ஏ. கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 5 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. அதேபோல், மகாகத்பந்தன் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 5 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது.
இதில், மகாகத்பந்தன் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரும், ஆர்.ஜே.டி. தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது தொகுதியான ரகோபூரில் காலை முதல் முன்னிலை, பின்னடைவு என மாறி மாறி ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தார். மொத்தம் 32 சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அவர் ஏற்ற இறக்கங்களுடனே இருந்துவந்தார்.

மாலைக்குப் பிறகு அவர் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியாக தேஜஸ்வி யாதவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதிஷ் குமாரை விட 14,532 வாக்குகளை கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் மொத்தம் 1,18,597 வாக்குகளையும், இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதிஷ் குமார் 1,04,065 வாக்குகளும் பெற்றார்.
November 14, 2025 7:37 PM IST


