Last Updated:
சூரியப் புயல் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்த கண் தெரியாத ஆன்மீகவாதியான பாபா வாங்கா 1911 ஆம் ஆண்டு பிறந்து 1996 இல் மறைந்தார். இவர் ஐரோப்பாவின் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படுகிறார். பாபா வாங்கா 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரின்சஸ் டயானாவின் மரணம் உட்படப் பல நிகழ்வுகளை முன்னறிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
பாபா வாங்கா குறித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூமி மற்றும் விண்வெளிச் சூழலைத் தாக்கும் அளவிற்கு மிகவும் தீவிரமான சூரியப் புயல் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்தது. இந்தப் புயலானது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிப்பட்ட அதிக ஆற்றல் கொண்ட மின்னூட்டப்பட்ட துகள்கள் மற்றும் காந்தப் புலங்களின் கொந்தளிப்பு என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த சூரியப் புயல் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது செவ்வாய் கிரக ஆய்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த சூரியப் புயல் குறித்து பாபா வாங்கா முன்னரே கணித்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
November 15, 2025 8:14 PM IST
நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வுக்கு தடை போட்ட சூரியப் புயல்! மீண்டும் உண்மையாகிறதா பாபா வாங்காவின் கணிப்பு?


