Last Updated:
முகமது ஷமி இதுவரை 119 IPL போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு நடைபெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக ட்ரேட் முறையில் வீரர்களை ஐபிஎல் அணிகள் மாற்றி வருகின்றன. இந்த முறையை பயன்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, எதிர்வரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்.
அவரை சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே வாங்கிய தொகையான ரூ. 10 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐபிஎல் சீசனில் முகமது ஷமியின் பர்ஃபார்மென்ஸ் திருப்திகரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், 9 போட்டிகளில் விளையாடி வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவரது எக்கானமி ரேட் 11.23 ஆக இருந்தது.
இருப்பினும் லக்னோ அணிக்கு மிகவும் தேவையானர்களில் ஒருவராக ஷமி இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
முகமது ஷமி இதுவரை 119 IPL போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
November 15, 2025 2:59 PM IST


