ஆனால், இத்தகைய அஸ்திரத்தை பாஜக கையில் எடுக்குமா? என்பது சந்தேகமே. ஏனென்றால், நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்பிக்கள் ஆதரவு அத்தியாவசியமாக இருந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பாஜக அந்த இடத்திற்கு செல்லாது. ஆனால், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற சிக்கலில் சிக்கியுள்ளார் நிதிஷ்குமார் என்பதே நிதர்சன உண்மை.


