காத்தான்குடி 5 பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாசலில் 38 வது வருடமாக ஹாஜாஜி கந்தூரியையொட்டி 20,000 பேருக்கு இன்று (19) சமைத்த உணவு அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது
காத்தான்குடி5 பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாசலில் வருடாந்தோறும் இடம்பெற்று வரும் ஹாஜாஜி கந்தூரி நிகழ்வின் 38 வது வருட கந்தூரி நிகழ்வுக்கான கொடியேற்றம் கடந்த புதன்கிழமை (15) இடம் பெற்றது.
கடந்த ஐந்து தினங்களாக காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாசலில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இறுதி தினமான இன்று 20,000 பேருக்கு சமைத்த உணவு அன்னதானமாக வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கந்தூரி நிகழ்வு காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி தலைமையில். அவரின் பிரார்த்தனையுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்வு. ஆரம்பித்து வைக்கப்பட்டது
இதில் மட்டக்களப்பு கல்லடி 243 ஆவது ராணுவ முகாம் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திமால் குமார சிங்க மற்றும் இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம் உட்பட அதன் உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


&w=1200&resize=1200,675&ssl=1)