Last Updated:
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியது எது? என்பது குறித்து பார்க்கலாம்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியது எது என்பது குறித்து பார்க்கலாம்.
பிகாரில் 3 கோடியே 51 லட்சம் பெண் வேட்பாளர்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒரு கோடியே 34 லட்சம் பேர் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்றவர்கள். இந்நிலையில், 2020இல் 59 புள்ளி 7 சதவீதமாக இருந்த பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு தற்போது 71 புள்ளி 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்திட்டம் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற பெருமளவில் உதவியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, ஒரு கோடியே 67 லட்சம் குடும்பங்களுக்கு 125 யூனிட் இலவச மின்சாரத்தை என்.டி.ஏ. கூட்டணி அரசு வழங்கி வருகிறது. இது 200 யூனிட்டாக உயர்த்தப்படும் என மகாகத்பந்தன் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தாலும், அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கவில்லை. முதியவர்களுக்கான ஓய்வூதியத்தை 400 ரூபாயில் இருந்து ஆயிரத்து நூறு ரூபாயாக நிதிஷ் குமார் அரசு கடந்த ஜூலை மாதம் உயர்த்தியதும்,
வேலையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என என்.டி.ஏ. கூட்டணி வாக்குறுதி அளித்ததும் அக்கூட்டணிக்கு கை கொடுத்துள்ளது. சிராக் பாஸ்வானை கூட்டணிக்கு இழுத்தது, இந்தியா கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் எழுந்த இழுபறி, பிரதமர் மோடியின் தொடர் பரப்புரை உள்ளிட்டவை என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியின் அரியணையை தக்கவைத்துள்ளது.
November 14, 2025 9:24 PM IST


