Last Updated:
பீகார் தேர்தலில் Congress 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் என்.டி.ஏ. மற்றும் மகாகத்பந்தன் கூட்டணி இடையே நேரடிப் போராட்டம் நிலவியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பிகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிதான் வெல்லும் எனக் கணித்திருந்தது. அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணி 121 – 141 தொகுதிகள் வரையும், மகாகத்பந்தன் கூட்டணி 98 – 118 வரை வெல்லும் எனக் கணித்திருந்தன. ஆனால், இன்றைய தேர்தல் முடிவில் மகாகத்பந்தன் கூட்டணி பெரும் சரிவை சந்தித்தது.
அதிலும், மகாகத்பந்தன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மொத்தம் 61 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் அக்கட்சி வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம், பிகாரில் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
November 14, 2025 9:29 PM IST


