மேலும், மக்கள் நேரடியாக உதவி பெறுவதற்காக ரிசர்வ் வங்கி 2025 அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மாவட்ட அளவில் சிறப்பு முகாம்களை நடத்தும் என்று அறிவித்துள்ளது. இம்முகாம்களில் மக்கள் தங்கள் செயல்படாத கணக்குகளுக்கான விவரங்களைச் சமர்ப்பித்து, உரிய ஆவணங்களுடன் நேரடியாக கோரிக்கைகள் செய்யலாம். தேவையான அடையாளச் சான்றுகள் — ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் — வழங்கப்பட்டால், அந்த தொகையை வட்டியுடன் மீட்கும் வாய்ப்பு உண்டு.


