• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி | Delhi Blast Incident Doctor Umar was Drive Blasted Car Confirmed

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி | Delhi Blast Incident Doctor Umar was Drive Blasted Car Confirmed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் வெடித்த காரை ஓட்​டிச் சென்​றது மருத்​து​வர் உமர் நபி-தான் என்​பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது.

இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது. சம்பவ நாளில் டெல்லி முழு​வதும் பல்​வேறு சிசிடிவி பதிவு​களில் அவரது முகம் பதி​வாகி​யிருந்​தது.

ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழக மருத்​து​வக் கல்​லூரி​யில் இவர் பணி​யாற்றி வந்​தார். இவர் அங்​குள்ள மருத்​து​வர்​கள் சிலருடன் சேர்ந்து நாடு முழு​வதும் தொடர் குண்டு வெடிப்​பு​களை நிகழ்த்த மிகப்​பெரிய சதித் திட்​டங்​களை தீட்​டியது ஒவ்​வொன்​றாக தெரிய​வந்​தது. ஜெய்ஷ் இ முகமது, அன்​சார் கஸ்​வத்​-உல்​-ஹிந்த் ஆகிய அமைப்​பு​களு​டன் இவர்​களுக்கு தொடர்பு இருப்​பதும் அடுத்த சில மணி நேரத்​தில் தெரிய​வந்​தது. இதையடுத்து 3 மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

உமர் நபி​யின் தாயாரிடம் இருந்து கடந்த செவ்​வாய்க்​கிழமை டிஎன்ஏ மாதிரி​கள் சேகரிக்​கப்​பட்டு பரிசோதனைக்கு அனுப்​பப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த மாதிரி​களின் மூலக்​கூறுகளும் வெடித்து சிதறிய காரில் இருந்த உமரின் உடல்​பாக மூலக்​கூறுகளும் ஒத்​துப்​போவது பகுப்​பாய்​வில் தெரிய​வந்​துள்​ளது. எனவே காரை ஓட்டி வந்​தது உமர் நபி​தான் என்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இந்த ஒயிட் காலர் தீவிர​வாதத்​தின் முக்​கிய சதி​கார​ராக உமர் நபி இருந்​துள்​ளார். குண்டு வெடிப்பை தொடர்ந்து 200-க்​கும் மேற்​பட்ட கண்காணிப்பு கேம​ராக்​களின் பதிவு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டது. இதில் குண்டு வெடிப்​புக்கு சில மணி நேரத்​துக்கு முன் உமர் நபி, ராம்​லீலா மைதானத்​துக்கு அரு​கில் உள்ள ஒரு மசூ​திக்கு அரு​கில் இருப்​பதை காண​முடிகிறது. இதன் மூலம் குண்டு வெடிப்பை நிகழ்த்​து​வதற்கு முன் அவர் மசூ​திக்கு சென்​றிருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது.

வெடித்து சிதறிய ஹுன்​டார் ஐ20 காருடன் மேலும் 2 கார்​களை குண்டு வெடிப்பை நிகழ்த்​து​வதற்​காக தீவிர​வா​தி​கள் வாங்​கியது தெரிய​வந்​தது. இதில் சிவப்பு நிற ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் கார், ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் உள்ள கண்​ட​வலி கிராமத்​தில் இருந்து நேற்று முன்​தினம் மாலை பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்​கள் இந்த காரை ஆய்வு செய்​தனர். காரை சுற்​றி​லும் 200 மீட்​டர் பகு​தி​களை போலீ​சார் சுற்றி வளைத்​துள்​ளனர், இந்நிலையில் 3-வது காரை (மாருதி சூசுகி ப்ரெஸ்​ஸா) பறிமுதல் செய்துள்​ளனர்.



Read More

Previous Post

Tamilmirror Online || கொட்டாஞ்சேனை சம்பவம் : மேலும் இருவர் கைது

Next Post

ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: கால் இறுதியில் லக்‌ஷயா சென் | Japan Badminton Series: Lakshya Sen on the Quarter Finals

Next Post
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: கால் இறுதியில் லக்‌ஷயா சென் | Japan Badminton Series: Lakshya Sen on the Quarter Finals

ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: கால் இறுதியில் லக்‌ஷயா சென் | Japan Badminton Series: Lakshya Sen on the Quarter Finals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin