Last Updated:
கடந்த சீசனில் அவர் அவர் லக்னோ அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்தார்,
ஐபிஎல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
இந்நிலையில் டிரேடிங் முறையில் அணிகள் வீரர்களை தங்களுக்குள் மாற்றி வருகின்றன. அடுத்த சீசனுக்காக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுள்ளார்.
ஷர்துல் தாக்கூரின் ஏற்கனவே இருந்த வீரர் கட்டணமான ரூ. 2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 34 வயதான தாக்கூர், ஐபிஎல் 2025 சீசனில் காயம் காரணமாக வெளியேறிய வீரருக்குப் பதிலாக மாற்று வீரராகவே (Injury Replacement) லக்னோ அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சீசனில் அவர் அவர் லக்னோ அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்தார், ஆனால் அவரது எக்கானமி விகிதம் 11.02 ஆக இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி, ஷர்துல் தாக்கூர் ஐபிஎல்-லில் விளையாடவுள்ள ஏழாவது அணி ஆகும். இதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
November 13, 2025 10:41 PM IST


