• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

GenevaTimes by GenevaTimes
May 19, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒடிஸாவில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

பிஜு ஜனதா தள(பிஜேடி) வேட்பாளர் சனாதன் மஹாகுட் ரூ.227.67 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவர் சம்புவா தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஒடிஸாவில் புவனேஸ்வர், கட்டாக், தேன்கனல், கியோஞ்சார், பூரி மற்றும் சம்பல்பூர் மக்களவைத் தொகுதிகளுடன், இந்தத் தொகுதிகளின் கீழ் உள்ள 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் ஒடிஸா தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஒடிஸாவில் 42 சட்டப்பேரவை இடங்களுக்கு போட்டியிடும் 383 வேட்பாளர்களில் 381 பேரின் சொத்து விவர பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளன.

அதன்படி, மாநிலத்தில் மூன்றாவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் 126 வேட்பாளர்கள்(33 சதவீதம்) ‘கோடீஸ்வரராக’ உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல்களில் பணபலத்தின் பங்கு அதிகம் என்பது, அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பணக்கார வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதன் மூலம் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காசிபுராவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும், சௌமியா ரஞ்சன் பட்நாயக்கின் குடும்பச் சொத்து ரூ.122.86 கோடி என்று தெரிய வந்துள்ளது. அவர் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ரூ.120.56 கோடிகளுடன் மூன்றாவது இடத்தை நாயகர்க் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் பிடித்துள்ளார்.

முக்கிய கட்சிகளில், பிஜு ஜனதா தளத்தின் 42 வேட்பாளர்களில் 36 பேர், காங்கிரஸைச் சேர்ந்த 29 பேர், பாஜகவைச் சேர்ந்த 28 பேர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், ஒடிஸா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.47 கோடி ஆக உள்ளது.

பரம்பாவில் போட்டியிடும் கைலாஷ் சந்திர நாயக் (ரூ. 1,000), பிரம்மகிரியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுகந்தா கடாய் (ரூ. 2,000), புவனேஸ்வரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோபிநாத் நாயக் (ரூ. 2,000) ஆகியோர் குறைந்த சொத்துக்களைக் கொண்ட வேட்பாளர்களாக உள்ளனர்.

ஆய்வு செய்யப்பட்ட 381 வேட்பாளர்களில், 100 வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகள் உள்ளன.

முக்கியக் கட்சிகளில், 23 பாஜக வேட்பாளர்கள், ஒரு சிபிஐ(எம்) வேட்பாளர், 13 காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் 12 பிஜேடி வேட்பாளர்கள் தங்கள் பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

155 வேட்பாளர்கள், 5 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இடைப்பட்டவர்களாகவும், 210 பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களாகவும் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தவிர, 12 வேட்பாளர்கள் டிப்ளமோ படித்தவர்களாகவும், 4 வேட்பாளர்கள் சராசரி கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

தற்காலிக விசாவில் கனடாவில் இருக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Next Post

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த மீண்டும் முட்டை இறக்குமதி

Next Post
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த மீண்டும் முட்டை இறக்குமதி

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த மீண்டும் முட்டை இறக்குமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin