Last Updated:
இந்த போட்டி ஒரு வாழ்க்கை சார்ந்த லைப் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் என பரவலாக அறியப்படுகிறது
முதன்முறையாக தேசிய அளவிலான பிக்கிள் (Pickle Ball) பால் லீக் போட்டித் தொடர் இந்தியாவில் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது.
பிக்கிள் பால் போட்டிகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது. டென்னிஸ் போட்டியை போன்று இந்த பிக்கில் பால் போட்டியை இரண்டு பேர் அல்லது நான்கு பேர் விளையாடலாம். இதற்கான பேட், பந்துகள் விலை குறைவு என்பதாலும், குறுகிய இடத்தில் இந்த போட்டியை விளையாட முடியும் என்பதாலும், பிக்கிள் பால் போட்டிகள் அதிக பிரபலம் அடைந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் இந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பிக்கள் பால் லீக் தொடர் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ம் தேதி வரை புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் பிக்கேல் பால் லீக் தொடங்குகிறது.
முதன் முறையாக பிக்கிள் பால் லீக் இந்த ஆண்டு ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவுண்டு ராபின் முறை மற்றும் நாக் அவுட் முறைப்படி இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து இந்திய பிக்கிள் பால் சங்கத்தின் தலைவர் சூரியவீர் சிங் கூறுகையில், இந்தியாவில் பிக்கிள் பால் போட்டிகள் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. ஆரோக்கியமான நாட்டை உருவாக்குவதற்கு இந்த போட்டி முக்கிய பங்கு வகிக்கும். இதனை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு லீக் தொடங்குகிறது என்று தெரிவித்தார்.
இந்த விளையாட்டினை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அங்கீகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டி ஒரு வாழ்க்கை சார்ந்த லைப் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் என பரவலாக அறியப்படுகிறது. வர்த்தக ரீதியிலும் பிக்கில் பால் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த பிக்கில் பால் போட்டிகளுக்கு சந்தை மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
November 13, 2025 5:47 PM IST


