Last Updated:
எந்தவிதமான கேள்விகளும் உங்கள் மீது எழாமல் இருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது சம்பந்தமான தகவல்களை நீங்கள் தெளிவாக வைத்திருப்பது அவசியம்.
அதிக மதிப்பிலான பணப் பரிமாற்றங்கள் குறித்து வங்கிகள் வருமானத்துறையிடம் தகவல் தெரிவிப்பது அவசியமாகும். ஒரு நிதியாண்டில் உங்களுடைய சேமிப்புக் கணக்குகளில் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான அல்லது கரன்ட் அக்கவுன்ட்டுகளில் 50 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்படும் பட்சத்தில் அது குறித்து வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும். வழக்கத்திற்கு மாறான சிறிய அளவிலான டெபாசிட்கூட இங்கு கவனத்தில் கொள்ளப்படும். ஆனால், உடனடியாக இதற்காக உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்பது அர்த்தம் கிடையாது.
இது மாதிரியான அனைத்து தகவல்களையும் வங்கிகள் வருமான வரி அதிகாரிகளிடம் SFT அல்லது ஸ்டேட்மென்ட் ஆஃப் ஃபைனான்ஷியல் டிரான்ஸாக்ஷன் வடிவில் சமர்ப்பிக்கும். இது ஆட்டோமேட்டிக்காகவே வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டு வரும். உங்களுடைய டெபாசிட் குறிப்பிட்ட வரம்பைவிட அதிகமாகும்போது, அந்த தகவல் வருமான வரி போர்ட்டலில் உள்ள ஆண்டுவாரியான தகவல் அறிக்கையில் நேரடியாக காண்பிக்கப்படும். ஒருவேளை நீங்கள் வருமான வரித்துறையில் காண்பித்த வருமானமும், வங்கி செயல்பாட்டில் உள்ள உங்களுடைய பணப் பரிமாற்றங்களும் ஒத்துப்போகாத பட்சத்தில் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
எந்தவிதமான கேள்விகளும் உங்கள் மீது எழாமல் இருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது சம்பந்தமான தகவல்களை நீங்கள் தெளிவாக வைத்திருப்பது அவசியம். அது வீட்டில் வைக்கப்பட்ட சேமிப்புப் பணம், பழைய நகையை விற்பனை செய்ததன் மூலமாக வந்த பணம், விவசாயம் மூலமாக வந்த வருமானம், பணமாக பெறப்பட்ட வாடகை அல்லது ஒரு சொத்தை விற்பனை செய்ததன் மூலமாக உங்களுக்கு கிடைத்த பணம் போன்ற எல்லாவற்றிற்குமான சரியான நிரூபணங்களை நீங்கள் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவேளை அதனை நீங்கள் செய்ய தவறும்பட்சத்தில் அது விவரிக்கப்படாத பணமாக வருமான வரித்துறையினரால் கருதப்படும். அதற்கு நீங்கள் அபராதங்களை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் சீரான கேஷ் டெபாசிட்களை நீங்கள் பராமரித்து வருகிறீர்கள் என்றால், அது வழக்கமாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. உதாரணமாக மாத சம்பளம் வாங்கும் ஒருவர் ஒவ்வொரு மாதமும் நிலையான சம்பளத்தைப் பெற்று வரும்போது திடீரென்று அவருடைய கணக்கில் 5 லட்ச ரூபாய் அல்லது 8 லட்ச ரூபாய் பணம் டெபாசிட் ஆகும் பட்சத்தில் அதற்கான விளக்கத்தை வழங்குவது அவசியம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?: என்னவாக இருந்தாலும் உங்களுடைய பணம் அனைத்திற்குமான மூலங்கள் மற்றும் ஆதார ஆவணங்களைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை குடும்பத்திற்குள்ளாக விற்பனை செய்வது அல்லது மரபு வழியாக உங்களுக்கு கிடைப்பது போன்றவற்றிற்கு நீங்கள் வங்கியை தொடர்பு கொண்டு உங்களுக்கு பணம் கொடுக்கும் நபரிடம் இருந்து கையெழுத்திடப்பட்ட ஒரு குறிப்பு வாங்குவது அவசியம். இதன் மூலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
November 13, 2025 4:12 PM IST
வருமான வரித்துறையில் இருந்து எந்தெந்த காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…


