டிஜிட்டல் உலகில் பல யூடியூபர்களும், இன்ஃப்ளுயென்சர்களும் அன்றாடம் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். பலரும் தங்களுக்கென சோஷியல் மீடியா பக்கத்தைத் தொடங்கினாலும், வெகு சிலரே நல்ல லாபம் காண்கிறார்கள்.
சீனாவைச் சேர்ந்த Zheng Xiang Xiang என்ற பெண் வாரத்துக்கு 120 கோடி சம்பாதிக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா..? இவர் பல தயாரிப்புகளை புரொமோட் செய்கிறார். மற்றவர்களைப் போல அந்தத் தயாரிப்புகளை குறித்து மணிக்கணக்கில் பேசாமல் வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்.
அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள் அட்டைப் பெட்டியில் தயாரிப்புகளை வைத்து சர்ரென தள்ள அதைக் கையில் எடுத்து கேமராவில் காட்டி அதன் விலையை மட்டும் கூறி பட்டென மறுபடியும் தள்ளிவிடுகிறார்.