Last Updated:
வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டி, விளக்கு, மின்விசிறி மற்றும் நாற்காலிகள் தானாக நகர்கின்றன.
உலகில் உள்ள ஒவ்வொரு நபரின் கனவும், தனது கனவு வீட்டை வாங்க வேண்டும். இதற்காக அவர் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறார். இன்றைய காலகட்டத்தில் வீடுகளின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு வீட்டை வாங்குவது என்பது நிறைய பணத்தை முதலீடு செய்வதாகும். ஆனால் சமூக வலைதளங்களில் ஒருவர் இரண்டு கோடி மதிப்புள்ள வீட்டை வெறும் இருபது லட்சத்தில் எப்படி வாங்கினார் என்று வைரலாகிவருகிறது.
அந்த நபர் தனது புதிய வீட்டின் இரவு வீடியோவை மக்களுடன் பகிர்ந்துள்ளார். இரவு நேரங்களில் தன் வீட்டில் எப்படி வினோதமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன என்று காட்டினார். அவரது வீட்டில் உள்ள இஸ்திரி பெட்டி தானே வேலை செய்யத் தொடங்குகிறது. விளக்குகளும் மின்விசிறிகளும் தானாக ஆன் ஆகும். இதற்குப் பிறகு, இரண்டு கோடி மதிப்புள்ள வீட்டை வெறும் இருபது லட்சத்தில் கொடுத்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று அந்த நபர் கூறினார்.
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு நபர் தனது அறையில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளை மக்களுக்கு காட்டினார். அவர் வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டி தானே ஆன் ஆனது. நாற்காலிகள் தானாக சரிய ஆரம்பித்தன. அதுமட்டுமின்றி மின்விசிறிகள், விளக்குகளும் தானாக அணையத் தொடங்கின. அந்த நபர் தனது வீட்டில் பேய் இருப்பதாக கூறுகிறார். இதன் காரணமாகவே மலிவு விலையில் வீடு விற்பனைக்கு வந்துள்ளது என அவர் தெரிவிக்கிறார்.
இந்த வீடியோ பகிரப்பட்டவுடன், அது வைரலானது. ஆனால், அந்த வீடியோ போலியானது என்று பலர் கூறிவருகின்றனர். ஒருவர், பொய்யான கூற்றை கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், வீடியோ பதிவு செய்பவர் வீட்டில் அவரே விளக்குகளை அணைக்கிறார். மேலும், மேசைக்கு அடியில் இருந்து ஒருவர் இஸ்திரி பெட்டியை இயக்குகிறார். வேறு ஒருவர் அவர் இஸ்திரி பெட்டியை காந்தம் கொண்டு இயக்குகிறார் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் ஒரு சிலர் அப்படிப்பட்ட வீட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
January 03, 2025 10:06 PM IST