Last Updated:
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024ன் படி, லூதியானாவின் மிகப்பெரிய பணக்காரராக ராஜிந்தர் குப்தா உள்ளார்.
பல துன்பங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு, யாருடைய துணையும் இன்றி சுயமாக வெற்றி பெற்ற தனிநபர்களின் வாழ்க்கை கதைகள் எப்போதுமே உத்வேகம் தரக்கூடியவை. அத்தகைய ஊக்கமளிக்கும் வாழ்க்கைக் கதைகளில் ஒன்று ராஜீந்தர் குப்தாவுடையது. எளிமையாக தொடங்கிய அவரது வாழ்க்கை, இன்று 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள கூட்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது என்றால், குப்தாவின் தொலைநோக்குப் பார்வைதான் காரணம்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024ன் படி, லூதியானாவின் மிகப்பெரிய பணக்காரராக ராஜிந்தர் குப்தா உள்ளார். இந்தப் பட்டியல் நாட்டின் பணக்காரர்களைப் பட்டியலிடுவதோடு நகரம் வாரியாக கோடீஸ்வரர்களையும் அடையாளம் காட்டுகிறது.
ராஜிந்தர் குப்தா ட்ரைடென்ட் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ட்ரைடென்ட் லிமிடெட்டின் (Trident Limited) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இது ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. லூதியானாவில் உள்ள இரண்டு பில்லியனர்களில் குப்தாவும் ஒருவர் என்பது அவரது வணிக வாழ்க்கையின் அசாதாரண செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பருத்தி வியாபாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த குப்தா, நிதி நெருக்கடி காரணமாக 9-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, அவர் மெழுகுவர்த்திகள் மற்றும் சிமென்ட் குழாய்கள் தயாரிப்பது போன்ற குறைந்த ஊதியம் பெறும் தொழில்களில் ஒரு நாளைக்கு 30 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்யத் தொடங்கினார்.
பல ஆண்டுகளாக சின்னச்சின்ன வேலைகளை செய்து, கடுமையான போராட்டங்களை எதிர்த்துப் போராடிய பிறகு, 1980-களில் குறிப்பிடத்தக்க முடிவை எடுத்தார் குப்தா. 1985-ம் ஆண்டில், அபிஷேக் இண்டஸ்ட்ரீஸ் என்ற உர வணிகத்தில் ரூ.6.5 கோடியை முதலீடு செய்தார். 1991-ம் ஆண்டில், அவர் கட்டாய் மில் என்ற கூட்டு முயற்சியை நிறுவினார். இது கூடிய விரைவிலேயே லாபம் ஈட்டத் தொடங்கியது.
அதன் பின்னர் காகிதம், ரசாயனம் மற்றும் ஜவுளி வணிகங்களில் நுழைய முடிவு செய்தார் குப்தா. மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் பல டிரைடென்ட் குழும நிறுவன செயல்பாடுகளை அவர் நிறுவினார். தற்போது, அவர்கள் ஜே.சி.பென்னி, வால்மார்ட் மற்றும் லக்சரி மற்றும் லினன் போன்ற மாபெரும் சில்லறை விற்பனை தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களை தங்கள் வாடிக்கையாளர்களாக ஆக்கியுள்ளனர்.
இதையும் படிக்க: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… மலிவு விலையில் மற்றொரு ரீசார்ஜ் பிளான் அறிமுகம்..!
64 வயதான குப்தா, தனது வணிக நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனிப்பட்ட காரணங்களுக்காக 2022-ல் டிரைடென்ட் இயக்குநர்கள் குழுவிலிருந்து வெளியேறினார். தற்போது, டிரைடென்ட் குழுமத்தின் முதன்மை வணிகமான டிரைடென்ட் லிமிடெட்டின் தலைவராக பணியாற்றுகிறார். 2007-ல், இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: துபாயில் வருமான வரி கிடையாது; ஆனால் செல்வ செழிப்பான நகரமாக திகழ்கிறது…! எப்படி தெரியுமா…?
ஃபோர்ப்ஸின் சமீபத்திய தரவுகளின்படி, டிரைடென்ட் நிறுவனர் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள ஒரு பில்லியனர் ஆவார். 2023-ல் இவருடைய சொத்து 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், குப்தாவின் சொத்து மதிப்பு 2022-ல் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
Ludhiana,Punjab
February 04, 2025 5:10 PM IST