இந்திய மசாலா பொருட்களை சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் எத்திலின் ஆக்சைடு குறித்த சர்ச்சையின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்ப்பதற்கு பெயர் போன இந்திய மசாலா பொருட்கள் உலக அளவில் பெரிய அளவில் பிரபலமாக உள்ளது. ஆனால் தற்போது உலக சந்தையில் இந்த மசாலா பொருட்களை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும் என்பது போன்ற பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் எத்திலின் ஆக்சைடு. மசாலா பொருட்களுக்கு சிகிச்சை அளிக்க எத்திலின் ஆக்சைடு பயன்படுத்துவதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணத்தை ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் ஸ்பைஸ் ஸ்டேக்ஹோல்டர்ஸ் (FISS) சேர்மன் அஸ்வின் நாயக் விவரித்துள்ளார்.
இன்டர்நேஷனல் ஏஜென்சி ஃபார் ரிசர்ச் ஆன் கேன்சர் எத்தலின் ஆக்சைடை குழு 1 கார்சினோஜன் கீழ் வகைப்படுத்தி உள்ளது. இது மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது. அஸ்வினின் கூற்றுப்படி, எத்திலின் ஆக்சைடு என்பது மக்களின் ஆரோக்கியத்திற்காக மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொருட்களை முறையாக பிராசஸ் செய்யாவிட்டால் அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளான சால்மோனெல்லா, இ-கோலை, அஃப்லாடாக்சின் மற்றும் கோலிஃபிராம் போன்றவை காணப்படும்.
எத்திலின் ஆக்சைடு கொண்டு மசாலா பொருட்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது இந்த நுண்ணுயிரிகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அவற்றால் ஏற்படும் தீங்கு தரும் பக்க விளைவுகள் நீக்கப்படுகின்றன.
மேலும் படிக்க:
ஒரு நாளைக்கு எவ்வுளவு சர்க்கரை சாப்பிட்டால் பாதுகாப்பானது..?
இந்த தற்போதைய குழப்பம் காரணமாக இந்திய மசாலா பொருட்களின் நற்பெயருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக FISS தெரிவித்துள்ளது. எத்திலின் ஆக்சைடு என்பது பூச்சிக்கொல்லி அல்ல. இதனை பயன்படுத்துவதன் பின்னணியில் உள்ள காரணத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீங்கு விளைவிக்கும் பேத்தஜன்கள் உட்பட பல்வேறு விதமான நுண்ணுயிரிகளை நீக்குவதற்கு எத்திலின் ஆக்சைடு ஒரு ஸ்டெரிலைசிங் ஏஜென்டாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் சிரஞ்சுகள் மற்றும் கத்திட்டர் போன்ற வெப்ப உணர்த்திறன் கொண்ட மருத்துவக் கழிவு நீக்கம் செய்யப்பட வேண்டிய பொருட்களை கிருமி நீக்கம் செய்வதற்கும் எத்திலின் ஆக்சைடு உபயோகிக்கப்படுகிறது. எத்திலின் ஆக்சைடு பயன்பாடு அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் ஸ்பைஸ் அசோசியேஷனல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அஸ்வின் விளக்கியுள்ளார். அங்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் 80 முதல் 90 சதவீதம் சிகிச்சை அளிக்கப்பட்ட மசாலா பொருட்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எத்திலின் ஆக்சைடு பயன்படுத்தப்பட வேண்டிய அளவில் கூடிய விரைவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை அவர் தெரிவித்தார். இந்த குழப்பத்தை அடுத்து ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் நேபாளில் இந்திய மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)