ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வலை பயிற்சியை ரத்து செய்துள்ளனர்.
சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
இதே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையும் படிக்க:
இம்பாக்ட் பிளேயராக சபாஷ் அகமது – ரகசியத்தை சொன்ன பேட் கம்மின்ஸ்
இதன்படி ஹைதராபாத் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியுடன் மல்லுக்கட்டுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதாலும், சென்னையின் வெப்பத்திற்கு தங்களை பழகிக்கொள்வதற்கும் ஹைதராபாத் அணி வீரர்கள் இன்றைய வலை பயிற்சியை ரத்து செய்துள்ளார்கள். மறுபுறம், கடந்த 2 வாரங்களில் 1 போட்டியை மட்டுமே விளையாடியுள்ள கொல்கத்தா அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொல்கத்தா அணி குவாலிபையர் 1 போட்டிக்கு முன்னர் விளையாடவிருந்த 2 போட்டிகளும் மழையால் ரத்து செய்யப்பட்டதே இந்த நீண்ட இடைவெளிக்கு காரணமாக உள்ளது. எனவே அதே அதிரடி ஃபார்மை தொடர, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மோதும் அணிகளில், கொல்கத்தா ஏற்கெனவே இரண்டு முறையும், ஹைதராபாத் அணி ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
