Last Updated:
மேற்கு வங்க எஸ்ஐஆர் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஆட்சேபனைகள் குறித்து விசாரிக்கவும், பணிகளை மேற்பார்வையிடவும் மாவட்ட நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எஸ்ஐஆர் தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது எஸ்ஐஆர் பணிக்கு தகுதியான அதிகாரிகளை மாநில அரசு வழங்கவில்லை என தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், மேற்கு வங்க அரசும், தேர்தல் ஆணையமும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே நம்பிக்கையற்ற சூழலே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆட்சேபனை மற்றும் கோரிக்கை மனுக்களை சரிபார்க்கும் பணி பாதியில் நிற்பதாக குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த கோரிக்கைகளை தீர்த்து வைக்க நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றது.
அதன்படி தற்போது பணியில் உள்ள மாவட்ட நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளை இந்த பணியில் ஈடுபடுத்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 28ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் மாதம் நடைபெற உள்ளது.


