• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதர்காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. காதலன் சொன்ன பகீர் வாக்குமூலம்.. போலீசார் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 23, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
புதர்காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. காதலன் சொன்ன பகீர் வாக்குமூலம்.. போலீசார் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 23, 2026 5:54 PM IST

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Rapid Read
ஜகியா முல்லா - சாபிர்
ஜகியா முல்லா – சாபிர்

கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் பாரா மெடிக்கல் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, அவரது காதலனே கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் தார்வாட் மானசூர் சாலை ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உயிரிழந்து கிடந்தது தார்வாட்டில் உள்ள காந்தி சவுக்கில் வசித்து வந்த ஜகியா முல்லா என்பது தெரியவந்தது. அவரது பெற்றோருக்கு தகவல் அளித்து வரவழைத்த போலீசார் அவர்களது பெண் தான் என்பதை உறுதி செய்தனர். பாராமெடிக்கல் மாணவியான ஜாகியா கடந்த ஆண்டு படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.

அவரது முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த துப்பாட்டாவால் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. கொலை வேறு எங்காவது நடைபெற்று உடலை இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்பது தெரியாத நிலையில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி செவ்வாய்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியேறிய ஜாகியா ஒரு வேலைக்காக ஆய்வகத்திற்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்தது. புதன்கிழமை போலீசார் தகவல் கொடுத்த பிறகு தான் அவர் உயிரிழந்திருப்பது குடும்பத்தினருக்கே தெரியவந்துள்ளது. இந்நிலையில், செல்போன் டவர் சிக்னல்களை ஆய்வு செய்த போலீசாருக்கு ஒரு புதிய துப்பு கிடைத்தது. சம்பவத்தன்று ஜாகியாவுடன் அவரது உறவினரும், காதலனமான சாபிர் முல்லா என்பவர் உடனிருந்துள்ளார். அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

சாபிர் மற்றும் ஜாகியா இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று மாலை இருவரும் வெளியே சென்றபோது, திருமணம் தொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாபிர், ஜாக்கியாவின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு, சடலத்தை புதர்க்காட்டில் வீசிவிட்டு சாபிர் தப்பிச் சென்றுள்ளார்.

மறுநாள் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தபோது அவர்களுடன் எதுவும் தெரியாதது போல் சுற்றி வந்துள்ளார். போலீசாரின் பக்கத்திலேயே குற்றவாளி இருந்தபோதும் அவர்களால் அப்போது அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது கொலையை ஒப்புக்கொண்டார். ​இந்தக் கொலையில் சாபிரின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு கொலையை செய்து விட்டு எளிதாக தப்பிவிடலாம் என்ற கனவு கண்டு கொண்டிருந்த காதலன் கடைசியில் வசமாக சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Location :

Bangalore,Karnataka

Read More

Previous Post

Tamilmirror Online || தீவிர அரசியலில் நான் ஈடுபடவில்லை: ரணில்

Next Post

Gold Rate | அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை…! நகைப்பிரியர்கள் ஹாப்பி… | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate | அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை…! நகைப்பிரியர்கள் ஹாப்பி… | வணிகம் போட்டோகேலரி

Gold Rate | அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை...! நகைப்பிரியர்கள் ஹாப்பி... | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin