Last Updated:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம், டிவியின் சத்தத்தை குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில், தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் கணவரை மனைவியே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டிவி சத்தத்தை குறைக்க சொன்னதால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலை வரை சென்றது எப்படி?
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம், டிவியின் சத்தத்தை குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில், தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஏசி மெக்கானிக் ஷேக் அகமத், கிராந்தி தம்பதி 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதி விஜயவாடா அருகே உள்ள மங்களகிரியில் பொதுமக்களுக்கு மாநில அரசு கட்டிக் கொடுத்திருக்கும் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
ஏசி மெக்கானிக் வேலை செய்துவரும் ஷேக் அகமத் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி இருக்கிறார். அப்போது அவருடைய மனைவி கிராந்தி, அதிக சத்தத்துடன் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் டென்ஷனான ஷேக் அகமத் தலைவலியாக இருக்கிறது, சத்தத்தை கொஞ்சம் குறைத்து பார்க்குமாறு மனைவியிடம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், மனைவி கிராந்தி, டிவி சத்தத்தை குறைக்க முடியாது என்று அதிகார தோரணையில் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஷேக் அகமத் மனைவி கிராந்தியை அடித்ததாக கூறப்படுகிறது. கணவர் தன்னை அடித்து விட்டாரே என்ற ஆத்திரம், அழுகை ஆகியவை பீறிட்டு எழுந்த நிலையில், வீட்டில் காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து வந்த கிராந்தி, கணவர் சற்று அசந்த நேரம் பார்த்து வயிற்றில் பலமாக குத்தி உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஷேக் அகமத் அலறி துடித்திருக்கிறார்.
அருகே வசிப்பவர்கள் விரைந்துவந்து ஷேக் அகமதுவை மீட்டு, மங்களகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.


