இப்போதெல்லாம் இந்திய வம்சாவளியைச் சேராதவர்கள் அமெரிக்காவில் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டிற்கான இந்தி யாஸ்போரா ஏஐ உச்சி மாநாடு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “பார்ச்சூன் 500 நிறுவனங்களின் 10 தலைமை செயல் அதிகாரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் படித்த இந்தியர்களாகவே இருக்கின்றனர். நீங்கள் இந்தியராக இருந்தால் அமெரிக்க நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என்பது பழைய நகைச்சுவை. புதிய நகைச்சுவை என்னவென்றால், நீங்கள் இந்தியராக இல்லையெனில் அமெரிக்காவில் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது. கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்த இந்தியர்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.” எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வணிகத் தலைவர்களும் கார்செட்டியின் உணர்வையே வெளிப்படுத்தினர்.
இன்பர்மேட்டிகா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அமித்வாலியா பேசுகையில், “உலக அளவில் இந்தியா மீதான பார்வை மிகவும் வித்தியாசமாக உள்ளது. பிரதமர் மோடியால் செய்ய முடிந்தது என்னவென்றால், உலக முதலீட்டாளர்களின் பார்வையை இந்தியா பக்கம் ஈர்த்ததுதான்” எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
