• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்கா, ஜப்பானை அலறவிடும் இந்தியா! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா, ஜப்பானை அலறவிடும் இந்தியா! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா, சூரிய சக்தி மின்சார உற்பத்தியிலும் பல நாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

உலகின் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து, 3ஆவது இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரேசில் ஆகிய 10 பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியாவும் இருக்கிறது.

இந்நிலையில், சூரிய சக்தி மின்சார உற்பத்தியிலும், ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, 3ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.  2015ஆம் ஆண்டில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி துறையில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருந்ததாக, உலகளாவிய எரிசக்தி துறை குறித்து தரவுகளை வெளியிடும் ஆம்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், இந்தியா 3ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் சூர்யகர் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் வீடுகளில் இலவச ரூஃப் டாப் சோலார் பேனல்கள் பொருத்தப்படுகின்றன. அத்துடன், சோலார் பேனல்கள் அமைப்பதற்கு மானியமும் கொடுக்கப்படுவதோடு, வீடுகளில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களால், இந்தியாவில் சூரிய சக்தி மின்சாரத்தின் உற்பத்தி, மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், சூரிய சக்தி மின்சாரத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும் என்றும் ஆம்பர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் படிக்க: சென்னையில் இப்படி ஒரு பிரம்மாண்ட அரண்மனையா… இன்னும் வாழும் மன்னர் குடும்பம் பற்றி தெரியுமா?

அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி சூரிய சக்தி மின்சார உற்பத்தி 5.5 சதவீதமாக இருந்த நிலையில், இந்தியாவின் சூரிய சக்தி மின்சார உற்பத்தி 5.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டில் வெறும் 0.5% மட்டுமே சூரிய சக்தி மின்சார உற்பத்தி நடைபெற்ற நிலையில், தற்போது அது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

விளம்பரம்

இதன் காரணமாக, சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக, இந்தியா தற்போது இடம்பிடித்துள்ளது. இதன்மூலம், ஜப்பானை பின்னுக்குத் தள்ளியுள்ள இந்தியா, சூரிய சக்தி மின்சார உற்பத்தி மூலம் வல்லரசாகும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

.

Read More

Previous Post

பிட்ச் ரிப்போர்ட் முதல் பிளேயிங் XI வரை… யாருக்கு எது சாதகம்? – News18 தமிழ்

Next Post

ஈரான் பிடியில் இருந்த 16 இந்தியர்கள் உள்ளிட்ட 24 மாலுமிகள் விடுவிப்பு | 24 sailors including 16 Indians held by Iran freed

Next Post
ஈரான் பிடியில் இருந்த 16 இந்தியர்கள் உள்ளிட்ட 24 மாலுமிகள் விடுவிப்பு | 24 sailors including 16 Indians held by Iran freed

ஈரான் பிடியில் இருந்த 16 இந்தியர்கள் உள்ளிட்ட 24 மாலுமிகள் விடுவிப்பு | 24 sailors including 16 Indians held by Iran freed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin