அதிபர்த் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு, பிரசன்னம்
தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு
அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை
விடுத்துள்ளார்.
மே தினக் கூட்டத்தின் பின்னர் தேர்தலை கருத்திற் கொண்டு அரசியல் பணிகளை
முடுக்கிவிட ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
மிகப் பெரிய பேரணி
அதிபர்த் தேர்தலை நேரடியாக இலக்காகக் கொண்டு அரசியல் வேலைகளைத்
தொடங்குவதற்கான ஊஞ்சல் பலகையாக இந்த ஆண்டு பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த
ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது.
தற்போது, நாடு முழுவதும் தொழில்முறை குழுக்களுடன் கூட்டங்களை நடத்தும் பணியில்
அந்தக்கட்சி ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து கொள்ளவுள்ள பரந்த
கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் பங்கேற்க ரணில் திட்டமிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |