இந்திய ராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30 ஆம் தேதி, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டார்.
அவர், கடந்த 6 ஆம் தேதி 62 வயதை எட்டிய நிலையில், இந்திய ராணுவ விதிப்படி வரும் 31 ஆம் தேதியுடன், மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்து, புதிய ராணுவ தலைமை தளபதியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ராணுவ விதி 1954-ன் கீழ், தலைமை தளபதியின் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து, நியமனத்திற்கான அமைச்சரவை குழு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு, இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பீவாரின் பதவிக்காலத்தை இந்திரா காந்தி அரசு ஓராண்டுக்கு நீட்டித்தது. அதன்பிறகு, தற்போது தான், இந்திய ராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:
“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை” – பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவில் விளக்கம்!
அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள துணை ராணுவ தளபதிகளான
உபேந்திர திவேதி மற்றும் ஏ.கே. சிங்கும் வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். எனவே, புதிய ராணுவ தலைமை தளபதியை தேர்வு செய்யவும் மத்திய அரசு அவகாசம் எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
.