இதற்கிடையில், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளதாக என்சிபி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், “தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய திரைப்பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் அரசியல், திரைத்துறை, கட்டுமானத்துறையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் ஜாஃபர் சாதிக் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் திரைத்துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.