சிங்கப்பூரில் பெண் ஒருவரை ஏமாற்றி நாசம் செய்த ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலியான பெயர், தொழில் மற்றும் மற்றொரு ஆணின் புகைப்படத்தை தனது காட்சிப் படமாகப் பயன்படுத்தி கைபேசி செயலி வழியாக பேசி அவர் ஏமாற்றியுள்ளார்.
வங்கிக் கணக்கில் வெறும் S$22 மட்டுமே வைத்திருந்த அவர், பெண்ணை சந்தித்து அவருடன் உறவு கொள்ள பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.
கடைசியாக அவர்கள் சந்தித்தபோது, ஆடவர் அந்த பெண்ணை தனது வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு பெண்ணின் கழுத்தை நெரித்து, குத்தி, ஆடவர் பாலியல் நாசம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
32 வயதான லீ ஜியாஜிக்கு இன்று வெள்ளிக்கிழமை (அக். 21) 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த லீ, சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை உதவியாளராகப் பணிபுரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.