பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தௌஹித் ரிடோய்க்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியின் போது அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பாக அவருக்கு அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து போட்டித் தொகையில் 15 சதவீதத்தை அபராதமாக வசூலிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
இப்போட்டியில், இலங்கை வீரர் நுவான் துஷார தனது முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூன்று விக்கெட்டுகளில் இரண்டாவது விக்கெட்டாக தௌஹித் ரிடோய் ஆட்டமிழந்ததன் பின்னர் அவர் மோசமாக நடந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
The post தௌஹித் ரிடோய்க்கு ICC அபராதம் விதிப்பு appeared first on Thinakaran.